அந்தப் பெண்ணை தீயிட்டுக் கொளுத்தியவனுங்க… சிறையில் கொசு கடிக்கிதுன்னு புகார் சொல்றானுங்க!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
hyderabad four accused - 2026

அந்த டாக்டர் பெண்ணை தீயிட்டுக் கொளுத்திய கொலைகாரர்கள், இன்று சிறையில் தங்களுக்கு கொசு கடிக்கிறது என்று புகார் சொல்கிறார்கள்.!

ஹைதராபாத் கால்நடை மருத்துவர் திசா கொலையில் முக்கிய குற்றவாளி மொஹமத் ஆரீஃப் உடல் நலக்கோளாறு ஏற்பட்டதால் சிறையிலேயே அவனுக்கு மருத்துவ சேவை செய்யப் படுகிறது.

இன்னொரு குற்றவாளி சென்னகேசவலுவுக்கு சிறுநீரக கோளாறு. அவனுக்கும் மருத்துவ சேவை சிறையில் செய்யப் படுகிறது. குற்றவாளிகள் எவரும் தம் அறையை விட்டு வெளியே வராமல் தினமும் காவல் காக்கப் பட்டுவருகிறது.

நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய திசா கொலை வழக்கில் குற்றவாளிகள் நால்வரும் தற்போது செர்லப்பல்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

prison hyd - 2026

அவர்களை தம் கஸ்டடியில் எடுக்க வேண்டும் என்று போலீசார் தாக்கல் செய்த மனு ஷாத்நகர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்தச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான மொஹமத் ஆரீஃபுக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிகிறது.

செர்லபல்லி சிறையில் சூப்பரின்டென்டென்ட் எம். சம்பத் செவ்வாயன்று குற்றவாளிகளின் அறைகளை பரிசீலித்து அவர்களோடு உரையாடினார். சிறையில் கொசுக்கடி அதிகமாக இருப்பதால் சிரமமாக இருப்பதாக குற்றவாளிகள் அவரிடம் புகார் செய்தனர்.

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

ஆரீஃப் உடல்நலமின்றி அவதிப்படுவதை கண்டறிந்த அவர் மருத்துவரை அழைத்து சோதித்தபோது அவனுக்கு ஜுரம் என்று சொல்லி மருந்துகள் அளித்தார். இதே வழக்கின் மற்றொரு குற்றவாளி சிறுநீரகக் கோளாறால் அவதிப்படுவதால் அவனுக்கும் மருத்துவ உதவி அளித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நால்வரும் அறையை விட்டு வெளியே வராதபடி அங்கே காவல் காக்கின்றனர். அவர்களுக்கு டிபன் சாப்பாடு தேநீர் எல்லாம் கதவின் கீழிருந்து உள்ளே அனுப்பப்படுகிறது. உள்ளேயே பாத்ரூம் வசதி உள்ளது.

மறுபுறம் இந்த நான்கு காமுகர்களையும் உடனடியாக தூக்கிலிடும்படி நாடெங்கும் போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன.

இதனிடையே, இந்த வழக்கு விரைந்து விசாரிக்கப் பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.