விருதுநகரில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தை காணொலி மூலம் திறந்துவைத்த முதல்வர்!

சற்றுமுன் சென்னை மதுரை

kamarajar fun edappadi - 2026விருதுநகரில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

காமராஜர் மணிமண்டபம் ரூ.25 கோடி செலவில் 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த விழாவில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் மற்றும் தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர்ராஜூ ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

kamarajar fun edappadi1 - 2026இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி… அதில்..

பெருந்தலைவர் காமராசர் மணிமண்டப வளாகத்தில் மலர் தோட்டம், உணவகம், பெருந்தலைவர் காமராசர் வாழ்ந்த இல்லத்தின் மாதிரி வடிவம், மாநாட்டுக் கூடம், தியான மண்டபம் ஆகிய வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளன.

கர்மவீரர் காமராசர் அவர்களை சிறப்பிக்கும் வகையில் பெருந்தலைவர் காமராசர் கல்வி & மருத்துவ அறக்கட்டளை சார்பாக, மதுரை-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபத்தை மாண்புமிகு முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.