கடந்த சில நாட்களுக்கு முன் தூத்துகுடியில் ந்டைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியாகினர் என்பதும் மேலும் பலர் இந்த துப்பாக்கி சூட்டால் காயம் அடைந்தனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.ஒன்றரை லட்சம் முதல் ஐந்து லட்சம் வரையிலும் நிதியுதவி வழங்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த நிலையில் சமீபத்தில் தூத்துகுடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ10 ஆயிரமும் நிவாரண உதவி வழங்கினார். ஆனால் இந்த நிவாரண உதவியை நான்கு குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர். இந்த நான்கு குடும்பத்தினர்களும் ரஜினியிடம் மட்டுமின்றி அரசு கொடுத்த நிதியுதவி உள்பட எந்த உதவியையும் பெற்று கொள்ள மறுத்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.

