நித்யானந்தா எங்கிருக்கிறார் தெரியவில்லை! வெளியுறவுத் துறை விளக்கம்!

சற்றுமுன்
raveesh kumar - 2026

புதிய பாஸ்போர்ட் கேட்டு நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நிராகரிப்பு; மற்ற பாஸ்போர்ட்டையும் ரத்து செய்துள்ளோம்! நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்!

நித்யானந்தா எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிவது சிரமமாக உள்ளது! அவர் விண்ணப்பித்த புதிய பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டுள்ளது என்று கூறினார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் ராவீஷ் குமார் கூறினார்.

அண்மைக் காலமாக நித்யானந்தா குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குஜராத் மாநில போலீஸார் வழக்கு ஒன்றுக்காக அவரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்று கூறப் பட்டது. ஆனால் பின்னர் அவர், இமயமலைச் சாரலில் பதுங்கி இருப்பதாகக் கூறப் பட்டது.

அப்போது, மேலும் ஒரு பகீர் தகவல் பகிரப் பட்டது. நித்யானந்தா ஒரு தனித் தீவை வாங்கியுள்ளார் என்றும், ஈக்வடார் நாட்டுக்கு அருகில் தனியாக ஓர் ஹிந்து நாடு என கைலாஷ் நாட்டை உருவாக்க உள்ளார் என்றும் தகவல்கள் பகிரப் பட்டன.

இந்நிலையில் இன்று காலை நித்தியானந்தா, மடகாஸ்கர் தீவில் இருந்து ஹைதி தீவிற்கு தப்பிச் சென்று விட்டார் என்று ஈக்வடார் தூதரகம் சார்பில் வெளியான அறிக்கையில் கூறப் பட்டது. எனவே நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்பதற்கான தகவல் இதுவரை உறுதியாக வெளியாகவில்லை.

இந்நிலையில் தில்லியில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ராவீஷ் குமார், நித்யானந்தாவின் பாஸ்போர்ட்டை ஏற்கெனவே ரத்து செய்துள்ளோம். அவரின் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் அவரை எங்களின் அனைத்து தூதரகங்களின் மூலமும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆயினும் அவர் எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டறிவது சிரமமாக உள்ளது…. என்று கூறினார்.

[poll id = “28”]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.