ஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என்று பேசிய துரைமுருகனின் சுவாரஸ்ய பேச்சை ரசித்தனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், தனது ஏக்கத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.
தமிழக சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது இந்த சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்தது.
2001- 2006ஆம் ஆண்டு இதே பேரவையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பேசியபோது, துரைமுருகன் நடிப்புத் துறைக்குச் சென்றிருந்தால் உலக நடிகர் நமக்கு கிடைத்திருப்பார் எனக் குறிப்பிட்டதை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நினைவு கூர்ந்தார்.
இதற்கு பதிலளித்த துரைமுருகன், அப்படி ஒரு வேளை நான் நடிகர் ஆகியிருந்தால் ஜெயலலிதாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்… அப்படி வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே! என்றார். சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்த சுவாரசியமான விவாதத்தை உறுப்பினர்கள் வெகுவாக ரசித்தனர்.





தà¯à®•ிலà¯à®±à®¿à®¨à¯à®¤à¯‹à®©à¯à®•à¯à®•௠விபரீத ஆசை.