
138 ஆவது பாரதியார் பிறந்தநாள் முன்னிட்டு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பிராமணர் சங்கத்தின் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
தலைமை : இல.அமுதன் , கிரிப் சிவகுமார் கோபாலகிருஷ்ணன் , யுகாதி சூரியா சர்மா மற்றும் கண்ணண் பாகவதர்
வாழ்க பாரதி வாழ்க பாரதி
கவிதை: பத்மன்
வானும் வையமும் வாழும் வரையினில்
வாழும் பாரதி பெருமையே
நீரும் நிலமும் சூழும் வரையினில்
சூழும் பாட்டுத் திறமையே
தீயும் வளியும் நீளும் வரையினில்
நீண்டு வழியைக் காட்டுமே
ஊனில் உயிரும் உறையும் வரையினில்
ஊக்கம் தந்து காக்குமே
வாழ்க பாரதி வாழ்க பாரதி
வாழ்க பாரதி நாமமே
வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்
வாழ்க வையகம் வாழ்கவே
அன்னை விலங்கை அறுத்து எறிய
ஆவேசப் பாக்கள் பொழிந்தவன்
முன்னைப் பெருமையை மீட்டுக் கொடுக்க
மூண்ட சுடராய் ஜொலித்தவன்
தன்னைப் பற்றிய எண்ண மின்றி
தாய்நாட் டுக்கென்றே உழைத்தவன்
பின்னை பாரதம் பீடு பெற்றிட
பேணும் நல்லறம் விதைத்தவன்
வாழ்க பாரதி வாழ்க பாரதி
வாழ்க பாரதி நாமமே
வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்
வாழ்க வையகம் வாழ்கவே
தமிழன் உணரா தமிழின் அருமையை
தரணி அறிய மொழிந்தவன்
தமிழின் உணர்வொடு தேசப் பற்றும்
தழைத்து ஓங்கிடப் புரிந்தவன்
தமிழில் மற்றவர் தகுந்த சாத்திரம்
தரமாய் பெயர்த்திட உரைத்தவன்
தமிழில் பேசி தமிழில் எழுதி
தமிழன் பெருமை காத்தவன்
வாழ்க பாரதி வாழ்க பாரதி
வாழ்க பாரதி நாமமே
வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்
வாழ்க வையகம் வாழ்கவே
பெண்ணின் அடிமை விலங்கை உடைத்து
பெருமை பொங்கச் செய்தவன்
மண்ணில் வாழும் மனிதர் யாவரும்
மகிமை ஓங்க நினைத்தவன்
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
மடமைத் தனத்தை வெறுத்தவன்
புனிதர் ஆக நம்மை உயர்த்த
புலமை அனைத்தும் கொடுத்தவன்
வாழ்க பாரதி வாழ்க பாரதி
வாழ்க பாரதி நாமமே
வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்
வாழ்க வையகம் வாழ்கவே
தகிட தகதிமி தகிட தகதிமி
தகிட தகதிமி தகிடதோம்.