ராப்பிச்சை கிழவியைக் கூட விட்டு வைக்கல..! சோறுபோடுறேன்னு சொல்லி ‘கேங்ரேப்’!

இந்தியா கிரைம் நியூஸ் லைஃப் ஸ்டைல்
IMG 20191222 WA0019 - 2026

ராப்பிச்சைக்கார கிழவியைக் கூட விட்டு வைக்காத கலீஜ் பணி. சோறு போடுகிறேன் வா என்று உள்ளே அழைத்து கேங் ரேப். ஹைதராபாத்தில் மீண்டும் மீண்டும் பாலியல் வன்முறைகள்.

செவ்வாய்க்கிழமை இரவு , ” பசிக்குது. சோறு இருந்தா போடுங்க சாமி!” என்று வீட்டு வாசலில் வந்து நின்று யாசித்த வயதான பெண்மணியை இரு காமுகர்கள் உள்ளே இழுத்துச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர் .

உள்ளூர்வாசிகள் போன் செய்யவே போலீசார் களத்தில் இறங்கினர்.

தொடர் பாலியல் வன்முறை சம்பவங்களால் ஹைதராபாத் நகரம் நடுங்கி வருகிறது.

மல்காஜ்கிரியில் 60 வயது பிச்சைக்காரி மேல் இரு கயவர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர்.

லாலாப்பேட்டையைச் சேர்ந்த செல்லப்பா அந்தோணி ஜார்ஜ் (50 ) விகாராபாதைச் சேர்ந்த நேநாவத் விஜயகுமார் இருவரும் குடும்பத்தில் இருந்து தூரமாக வசித்து வருகின்றனர். பெயிண்டிங் வேலை நிமித்தம் மிர்ஜாலகுடாவில் சேர்ந்து வசிக்கின்றனர்.

செவ்வாய் இரவு ஏழு மணி சுமாருக்கு 60 வயது பிச்சைக்காரி இவர்கள் வீட்டின் முன் நின்று உண்பதற்கு ஏதாவது தரும்படி கேட்டுள்ளாள்.

சோறு போடுவதாகக் கூறி ஜார்ஜ் அவளை உள்ளே அழைத்தான். இருவரும் அவளிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே பலவந்தமாக அவளை மதுவை குடிக்க வைத்து அவள் மேல் பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர்.

கிழவியின் கூக்குரலைக் கேட்ட அண்டை அயலார் உடனே 100 நம்பருக்கு போன் செய்தனர் . போலீசார் அங்கு வந்து சேருவதற்குள் விஷயத்தை கிரகித்த குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர். மிர்ஜாலகுடாவில் திரிந்து கொண்டிருந்த இவர்களை வெள்ளிக்கிழமை போலீசார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட முதியவளை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் உள்ளூர் வாசிகளை பெரிதும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.