யாருக்கெல்லாம் உசிரு இந்த உருளைக்கிழங்கு போண்டா?

Published:

urulaikizhanku - 2026

உருளைக்கிழங்கு போண்டா

தேவையானவை:


கடலை மாவு – 250 கிராம்
உருளைக்கிழங்கு – 250 கிராம்
சிறிய பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
கடுகு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 500 மில்லி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

pottoto ponda - 2026

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கி எடுக்கவும்.

இதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடலை மாவை பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்து, உருட்டி வைத்த உருண்டைகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

Related articles

Recent articles

spot_img