IMG 20191222 WA0022 - 2026

டிசம்பர் 22 இன்று விமரிசையாக கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் ஜெயந்தி விழா.

டிசம்பர் 22 தேசிய கணித தினமாக கொண்டாடப்படுகிறது.

கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜமனின் 125 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது 2012 இல் மெட்ராஸ் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலை அரங்கத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் டிசம்பர் 22 ஐ தேசிய கணித தினமாக அறிவித்தார் .

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 அன்று நாடெங்கிலும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேசிய கணித தினம் கொண்டாடப்படுகிறது . இன்றைய தினம் மாணவர்கள் தங்கள் கணித திறமையை வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்கள்.

இந்திய கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் ஃபெலோ ஆஃப் தி ட்ரின்டி கௌரவம் பெற்ற முதல் இந்தியர்.

IMG 20191222 WA0021 - 2026

ஃபெலோ ஆஃப் தி ராயல் சொசைட்டி கௌரவம் பெற்ற இரண்டாவது இந்தியர் .

இருபதாம் நூற்றாண்டின் உலகப் புகழ்பெற்ற கணித மேதைகளில் ஒருவராக அடையாளம் காணப் பெற்ற இந்தியர் ஸ்ரீனிவாச ராமானுஜன்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

இவர் ஈரோடு நகரில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் கோமலம்மாள், ஸ்ரீனிவாச ஐயங்கார் தம்பதிகளின் மகனாக 1887 டிசம்பர் 22 ல் பிறந்தார்.

சிறுவயது முதலே கணிதத்தில் அசாதாரணமான திறமையைக் காட்டினார்.

ஓஎஸ் கார் என்ற கணித மேதை படைத்த சினாப்சிஸ் ஆஃப் ப்யூர் மேதமெடிக்ஸ் என்ற புத்தகம் ராமானுஜனிடம் இருந்த மேதமையை வெளிக் கொண்டு வந்தது . அதிலிருந்த அல்ஜிப்ரா, அனாலிடிகல் ஜாமென்ட்ரி போன்றவற்றுக்கு தொடர்பான 6165 தேற்றங்களை நிரூபிப்பதற்கு பெரிய பெரிய பேராசிரியர்களே திக்குமுக்காடிய போது ராமானுஜன் எந்த நூலின் உதவியும் இன்றி எளிதாக அவற்றை நிரூபித்தார்

IMG 20191222 WA0023 - 2026

கணிதமேதை சீனிவாச ராமானுஜனைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்திய அரசாங்கம் 1962இல் ராமானுஜனின் 75 ஆம் பிறந்த நாளன்று நினைவு தபால் தலை வெளியிட்டது.

1917இல் ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டம் குப்பம் நகரில் ராமானுஜன் கணிதப் பூங்கா என்ற அருங்காட்சியகத்தை நிறுவியது.

இவர் 1920 ஏப்ரல் 26 இல் இயற்கை எய்தினார்.

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending