காபி குடிச்சிட்டு… கப்பை கடிச்சி சாப்பிட்டுடணும்! இல்லாவிட்டால்..!?

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
coffeecup - 2026

இங்கு காபி கப்பை யும் சேர்த்து சாப்பிடவேண்டும். தூக்கி எறியக் கூடாது.

காபி குடித்த பின் கப்பை என்ன செய்வோம்? சாதாரணமாக அங்கேயே வைத்துவிடுவோம். சற்று கழித்து எடுத்து சென்ற கழுவுவோம். ஆனால் சிலர் உடனே கழுவுவார்கள். இதுதானே நடக்கும். ஆனால் பிளாஸ்டிக் கப்புகளால் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாகின்றன என்பதால் அதற்கு தீர்வு காணும் விதமாக பல ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன.

ஏர் நியூஜிலாண்டு விமானத்தில் காலியான காபி கப்பைக் கூட தின்னும் படியாக ருசிகரமாக தயாரித்து அளிக்கிறார்கள்.

வென்னிலா ஃப்ளேவரோடு இருக்கும் இவை வாய்க்கு ருசியாக இருப்பதோடு சாதாரண உணவு போலவே ஜீரணமாகி விடுகிறது.

சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற உணவுகளை மக்கள் விரும்பி வரவேற்கிறார்கள்.

இவற்றின் தயாரிப்புக்காக ஏர் நியூஜிலாண்டு (Twiice) ட்வைஸ் என்ற நிறுவனத்தோடு கூட்டு சேர்ந்துள்ளது.

உண்ணுவதற்கு ஏதுவாக இருக்கும் கப்புகளை தயார் செய்வதில் ட்வைஸ் கம்பெனிக்கு நல்ல அனுபவம் உள்ளது.

இந்த புதிய முறையை கஸ்டமர்கள் விருப்பத்தோடு வரவேற்கிறார்கள் என்று ஏர் நியூசிலாந்து உயரதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.