இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வரும் ராஜ்நாத் சிங்கை கண்டித்து!

சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
15 July12 Rajnath singh - 2026

சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வரும் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இந்துமுன்னணி அமைப்பு கூறியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பினர் தெரிவித்த போது…

வரும் சனிக்கிழமை 28-12-2019 அன்று காலை 10 மணிக்கு எஸ்ஆர்எம் (SRM) காலேஜ் (காட்டாங்குளத்தூர் பொத்தேரி) வாசலில் காம கவிதை எழுதியும் பாலியல் வழக்கில் பதிவான கோழைமுத்து தான், தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தேவதாசி என்று இழிவாக பேசிய வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டமா? கொடுப்பது தமிழகத்துக்கே அவமானம் .

கொடுக்கும் கல்லூரியோ பல ஏக்கர் கோயில் சொத்தை ஆக்கிரமித்து கட்டியவர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து அவர் நடத்தும் எல்லா கல்லூரியிலும் கோயில் நிலம் புறம்போக்கு நிலம் உள்ளது .

அதை கொடுக்க வருகை தரும் ஒரு நல்லவர் நேர்மையான தேசபக்தர் மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்கள் கையால் கொடுப்பது வருத்தத்துக்குரியது !வேதனைக்குரியது !

இந்து முன்னணி சமுதாயத்தையும் தேசத்தையும் இழிவாகப் பேசும் யாராக இருந்தாலும் கண்டிக்கும் . அந்த வகையில் இந்த நிகழ்வை கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்… என்று கூறியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.