தோசைய இப்படி செஞ்சா சீக்கிரம் காலி!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
thalippu thosai 1 - 2026

தாளிப்பு தோசை

தேவையானவை:

தோசை மாவு – ஒரு கப்,
கடுகு, கறிவேப்பிலை,}
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு} – தாளிக்க தேவையான அளவு, இஞ்சி – சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – 2,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: .

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்த பின் கடுகு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை தாளித்து, மாவில் கொட்டி கலக்கவும்.

மாவை, தோசைக் கல்லில் தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்த பின்பு எடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்.

பச்சை மிளகாயை விரும்பாதவர்கள், மோர் மிளகாயைப் பயன்படுத்தலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.