ஆரோக்கிய சமையல்: லெமன் பிசிறல்!

Published:

lemon - 2026

லெமன் பிசிறல்

தேவையானவை:

கேரட் – கால் கிலோ,

எலுமிச்சம் பழம் – ஒன்று,

பச்சை மிளகாய் – 2,

நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,

கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

kerat 1 - 2026

கேரட்டை சுத்தம் செய்து துருவவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, துருவிய கேரட்டுடன் சேர்க்கவும். உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து பிசிறி, மேலே கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்,

இதை அப்படியே சாலட் போலவும் சாப்பிடலாம். சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

Related articles

Recent articles

spot_img