தினமும் காலையில் எலுமிச்சைச் சாறு பருகினால் நேர்த்தியான மெல்லிய உடல்வாகைப் பெறலாம்.
எலுமிச்சம் பழத்தோலை காய வைத்து பொடி செய்து கடலைமாவு, தயிர் சேர்த்து ஃபேஸ்பேக்காகப் பயன்படுத்தலாம்.
ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறுடன் சிறிது தண்ணீர் கலந்து முகத்தில் வட்டவட்டமாக தடவி 15 நிமிஷம் ஊறவிட்டு கழுவினால், பெண்களின் முகத்திலுள்ள பூனை முடிகள் நிரந்தரமாக அகலும்.
தோலுக்கு உற்ற தோழன் என்பதால் அடிக்கடி எலுமிச்சைச் சாறு பருக, சருமம் பளபளப்பாகும்.
தலைக்கு ஷாம்பு உபயோகித்த பிறகு சிறிது தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து தலைமுடியைக் கழுவினால் முடி மேலும் பளபளப்பாகக் காட்சியளிக்கும்.
வாரத்துக்கு ஒருமுறை எலுமிச்சம் பழச்சாறில் பற்களை சுத்தம் செய்தால் பற்கள் முத்துப்போல பிரகாசிக்கும்.
அடிக்கடி சளி, குமட்டல், வாந்தி என அவதிப்படுபவர்கள் இளம் சூடான நீரில் எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சைச் சாறை விட்டு, அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால், அப்போது பறித்தது போல ஃபிரெஷ்ஷாக இருக்கும்.
காலை வேளையில் தேநீரில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து அருந்தினால் உடல் எடை குறையும்.
தேன், எலுமிச்சை, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் கலவை சருமத்தை ஈரப்பதத்தோடு
வைத்திருக்கும்.
மெல்லிய இடை வேண்டுமா ?
Popular Categories



