October 24, 2021, 8:34 pm
More

  ARTICLE - SECTIONS

  முஸ்லிமாக மதம் மாறினால் பயங்கரவாதி ஆக்கப் படுவீர்கள்: போட்டி கிறிஸ்துவர்!

  மேட்டுப்பாளையம் தலித் மக்களே… நீங்கள் முஸ்லிமாக மதம் மாறினால் பயங்கரவாதிகள் ஆக்கப் படுவீர்கள். #கிறிஸ்துவுக்குள் வாருங்கள் உங்களை படித்தவனாக பணக்காரனாக ஆக்குகிறோம்! - என்று ஜான் டேவிட் என்பவர் ஒரு பதிவினை செய்திருந்தார்.

  competition1 - 1

  மேட்டுப்பாளையம் தலித் மக்களே… நீங்கள் முஸ்லிமாக மதம் மாறினால் பயங்கரவாதிகள் ஆக்கப் படுவீர்கள். #கிறிஸ்துவுக்குள் வாருங்கள் உங்களை படித்தவனாக பணக்காரனாக ஆக்குகிறோம்! – என்று ஜான் டேவிட் என்பவர் ஒரு பதிவினை செய்திருந்தார்.

  இதன் மூலம், இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்படும் தலித் மக்கள் அனைவருமே பயங்கரவாதிகள் ஆக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  இந்நிலையில், சாகும் வரை இந்து மதத்தில் தான் இருப்போம்.. என்று உண்மை கண்டறியும் குழுவிடம் அந்தப் பகுதி பட்டியலின மக்கள் பேசியதாகவும், இது திட்டமிட்ட பொய்ப் பிரசாரம் எனவும் இந்துமுன்னணியினர் கூறுகின்றனர்.

  ஜாண்டேவிட் என்பவர் தெரிவித்திருந்த கருத்து இதுதான்…

  competition - 2

  இந்தச் செய்தியின் பின்னணி இதுதான்…! கோவை மாவட்டம், மேட்டுப்பாளைம்,நடூர் பகுதி ஏடி காலனியில் பட்டியலின மக்களின் குடியிருப்புகள் உள்ளன.

  கோவை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்தது. கடந்த (02/12/2019) அதிகாலை மூன்று மணிக்கு மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று அந்தப் பகுதியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது.

  இதில் பட்டியலின மக்களின் குடியிருப்பைச் சேர்ந்த நான்கு வீடுகள் மீது சுவரின் இடிபாடுகள் விழுந்து , தூங்கிக் கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியாகினர்.

  இந்நிலையில் அது தீண்டாமைச்சுவர் என்றும் அந்தப் பகுதியில் உள்ள ஆதிக்க சாதிகள் பட்டியல் இன மக்களை ஒதுக்கி வைத்து வாழ்ந்ததாகவும் பொய் பரப்புரை பல தரப்பினரால் செய்யப்பட்டது.

  தமிழ் புலிகள் என்ற அமைப்பை சார்ந்தவர்கள் இதற்காக போராட்டம் நடத்துவதாக கூறி அங்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் காவல்துறை அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது. 25 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதில் சிலருக்கு பிணை கிடைத்தது, இன்னும் சிலர் சிறையில் உள்ளனர்.

  இந்த நிலையில் அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் பலவித சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால் அவர்கள் மீது தடுப்புச் சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் வருகின்றது.

  தமிழ் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள் இந்த நடவடிக்கையை திசைதிருப்பும் வகையில் சில இஸ்லாமிய அமைப்புகளினுடைய ஆதரவோடு நடூர் பட்டியலின மக்கள் குடியிருப்பை சேர்ந்த 80 குடும்பத்தினர், அதாவது 3000 பேர் இஸ்லாமியர்களாக மதம் மாறப் போவதாக ஒரு செய்தியை பரப்பினர்.

  அங்குள்ள சில மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்களை முன்னிறுத்தி ஊடகங்களுக்கு பேட்டி அளித்து பரபரப்பை உண்டாக்கினார்.

  உண்மையில் அங்குள்ள மக்கள் ஸ்ரீ ரங்கநாத பெருமாளின் பரம பக்தர்கள். அங்கு பஜனை குழுக்கள் இருக்கின்றன. ஆண்டுதோறும் காரமடை ரங்கநாதனுக்கு பூஜை செய்யும் முறை அவர்களுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  அங்குள்ள மக்களின் மனநிலை என்ன என்பதை கண்டறிய உண்மை அறியும் குழு அங்கு சென்றபோது அந்த மக்கள் நாங்கள் ஒருபோதும் மதம் மாற மாட்டோம் இதில் யாரோ வேண்டுமென்றே திட்டமிட்டு விஷமத்தனமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்றனர்.

  ஊடகங்களில் வந்த செய்தி உண்மையல்ல என்று கூறி தெளிவுபடுத்திய தோடு மட்டுமல்லாமல் . அரசும் அங்குள்ள அனைத்து சமுதாய மக்களும் அனைத்து உதவிகளையும் செய்தனர் என்றும் உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வாரிசு அடிப்படையில் வேலை தரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். மேலும் நாங்கள் சாகும் வரை இந்து மதத்தில் தான் இருப்போம் என்று கூறியுள்ளனர்.

  அப்பாவி மக்களின் துயரத்தை, அறியாமையை பயன்படுத்தி இது போன்ற மதமாற்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் இதன் காரணமாக பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,586FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-