ஆரோக்கிய சமையல்: எலுமிச்சை தொக்கு!

சமையல் புதிது பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
lemon - 2026

எலுமிச்சைத் தொக்கு

தேவையானவை:

எலுமிச்சம்பழம் – 10,

மிளகாய்த்தூள் – 10 டீஸ்பூன்,

பெருங்காயத்தூள், கடுகு – சிறிதளவு,

எண்ணெய் – 4 டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

lemon thokku - 2026

செய்முறை:

எலுமிச்சம்பழங்களை நறுக்கி சிறுசிறு துண்டுகளாக்கி, உப்பு கலந்து இரண்டு நாட்கள் ஊற வைக்கவும். பிறகு, மிளகாய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்து பொரிய விட்டு, அரைத்த விழுது சேர்த்து நன்கு சுருள வதக்கி எடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.