ஆலயம் காப்போம்! அடையாளம் காப்போம்!

உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
tenkasi temple gopuram - 2026

முன்னோர் உழைத்துச் சேர்த்து, நமக்காக விட்டுச் சென்ற அனைத்து வகை செல்வங்களின் ஒட்டுமொத்த அடையாளங்களான கோயில்களை நாம் சிறிது சிறிதாக அழிக்கின்றோம்.

அழிக்கப்படுவது, நாம் நம் வருங்கால சந்ததிகளுக்கு விட்டு செல்லும் சொத்து எனத் தெரியாமல் இருக்கிறோம். வெறுமே இருக்கிறோம்…

கோவில் பிராகாரங்களை குப்பை மேடாக்குவோம்… அர்ச்சகர் தரும் விபூதி குங்குமங்களை கோவில் தூண்களில் மட்டுமே கொட்டுவோம்..

கோவில்களின் இருள்நிறைந்த இடங்கள் காதலர் சந்திக்கும் இடங்களாக மாறினாலும் வேடிக்கை மட்டும் பாப்போம்…

வெட்டிக் கதைகளை சத்தம் போட்டு பேசி கோவிலின் அமைதியை கெடுப்போம்.

மந்திரம் மட்டும் கேட்க வேண்டிய கோவில் பிராகாரங்கள் இன்று மொபைல் ரிங் டோன் கேட்கும் இடமாக மாற்றுவோம்…

மனதில் அடைக்க வேண்டிய சுவாமியை மொபைலில் அடைக்க அவரை சுற்றி சுற்றி செல்ப்பி எடுப்போம்..

கோவில் வெளிப்புற சுற்றுச் சுவர்களில் மல ஜலம் கழிப்போம்…

ஒவியங்கள் சிற்பங்கள் மீது கண்டதையும் கிறுக்கி வைப்போம்…

யார் கேட்க முடியும் நம்மை ? எவன் கேட்பான் நம்மை?

“அரசாங்கம் இந்து ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும்” என்ற கோரிக்கை நாம் வைக்கும் பொழுது நாமும் நம்மை மாற்றி கொள்ள வேண்டும் அல்லவா?

மாற்றத்தை முதலில் நம்மிடம் இருந்து தொடங்குவோம்…

  • புகழ் மச்சேந்திரன் புகழ் (Pugal Machendran Pugal)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.