spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்மகப்பேறு அருளும் மகத்தான திருத்தலம்!

மகப்பேறு அருளும் மகத்தான திருத்தலம்!

- Advertisement -

பெண்கள் முங்கி குளித்தால் பிள்ளைப்பேறு கிட்டும் ஆலயம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆனது சைவம் வளர்த்த தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்று.

குளந்தை மாநகர் என்று அழைக்கப்பெறும் இவ்வூர் எழிலார்ந்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோவில் வற்றாத வளம் தரும் நதியின் வராக நதியின் தென்கரையில் அமைந்துள்ளது.

பாண்டியநாட்டில் சோழ மன்னனான ராஜேந்திர சோழன் கட்டப்பெற்ற கோயில் அவ்வகையில் இறைவனின் திருநாமம் ராஜேந்திர சோழீஸ்வரர் என்றும் அம்பாள் அறம்வளர்த்தநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

இத்திருத்தலம் கட்டிட அமைப்பில் முக்கியத்துவம் பெற்றது எந்த திருக்கோயிலும் இல்லாதபடி சுவாமி அம்பாள் சுப்ரமணியர் ஆகிய மூன்று சன்னதிகளும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன

அவ்வாறு 3 கொடி மரங்களும் உள்ளன திருவிளையாடல் புராணத்தில் பன்றிகளுக்கு மோட்சம் கொடுத்த இடம் இத்திருத்தலம் இதனை விளக்கும் வகையில் அரிய சிற்பங்கள் சுப்ரமணிய சுவாமி சன்னதியில் காணப்படுகிறது.

பிரதான மூர்த்திகளாக இறைவன் ராஜேந்திர சோழீஸ்வரர் இரவி அறம்வளர்த்தநாயகி மேலும் பாலசுப்பிரமணியன் என்று வழங்கப்பட்டாலும் மற்ற மூர்த்திகளும் சிறப்பான வழிபாடு நடத்தப்படுகிறது.

இத்திருத்தலத்தில் பெருமான் பாலசுப்பிரமணியன் ஆறுமுகம் பன்னிரண்டு கைகள் வள்ளி தெய்வயானை சமேதராக அழகு முகத்தோடு அதிசய மயில் வாகனத்தோடு காட்சி கொடுக்கிறார்

இவரது அருள் சக்தியினை விளக்க வார்த்தை ஏது மற்றைய மூர்த்திகளாக அனுமன் விநாயகர் ஸ்ர மிருத்ஞ்சர் வீரபாபு வீர மகேந்திரர் பொல்லாப்பிள்ளையார் நாயன்மார்கள் ஸ்ரீ மூல கணபதி ஏகாம்பரேஸ்வரர் ஆஞ்சநேயர் பால முருகன் சரஸ்வதி கஜலக்ஷ்மி சிவன் நடராஜர் சூரியர் சந்திரர் பைரவர் ஸ்ரீசுமித்திரர் என வணங்கி பணிகிறோம்.

இங்கு நோய் தீர்க்கும் பெருமகனார் சுர தேவரின் அறிய சிற்பம் காண்பவர் கருத்தை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது பிடிப்பவர்களுக்கு நாளும் அவர்களுக்கு நல்லருள் புரிந்து வருகிறார் அவதிப்படுபவர்களுக்கு ரசம் வைப்பதாக வேண்டிக் கொண்டு பிரார்த்தனையை செலுத்துவார்கள்.

இவ்வாலயத்தின் தலவிருட்சம் நெய் கொண்டான் மரம் அணிகலன் செய்வோருக்கு அருமருந்தாக மரத்தின் காய்கள் உள்ளன என்பது சிறப்பு.

இத்திருக்கோயிலுக்கு மற்றுமொரு சிறப்பு வளாகத்தில் ஓடும் ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் மருத மரங்கள் உள்ளன இந்த இரண்டு மரங்களுக்கு நடுவில் ஓடும் ஆற்று நீரில் மூழ்கி குளித்தால் பிள்ளைப்பேறு நிச்சயம்.

ஆற்றங்கரையோரம் வளர்ந்திருக்கும் ஆலம் விழுதுகளை ஊஞ்சல் போல் பிடித்து விளையாடுவது சிறுவர்களுக்கு ஒரு திகட்டாத செயல் புனித நீரில் நீராடிய பின் அரசமரப் பிள்ளையாரை வணங்கிவிட்டு ஆலயத்திற்குள் செல்வது சாலச்சிறந்தது.

மாமன்னர்கள் கொடையாகக் கொடுத்த ஆபரணங்கள் கலையம்சம் பொருந்தியவைகள். திருக்கோவிலுக்கு மூன்று கால நித்திய பூஜை நடைபெற்று வருகிறது.

கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் தோப்பு வருவாய் மூலமாகவும் காணிக்கை உண்டியல் கட்டண சீட்டுகள் விற்பனை மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 75 ஆயிரம் வரை வருமானம் வருகிறது.

சித்திரை வருஷப் பிறப்பு வைகாசி விசாகம் ஆடிபூரம் விநாயகர் சதுர்த்தி நவராத்திரி கந்தசஷ்டி தீபாவளி திருக்கார்த்திகை பங்குனி தேர் திருவிழா ஆகிய முக்கிய விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையினரால் நியமனம் செய்யப்பட்ட ஐந்து மற்றும் நிர்வாக அதிகாரி ஒருவருடன் நிர்வகிக்கப்பட்டு வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe