‘இஸ்லாமிய’ பயங்கரவாதிகள் சுட்டு உயிரிழந்த ‘கிறிஸ்துவ’ எஸ்.எஸ்.ஐ., படுகொலையைக் கண்டித்து ‘இந்து முன்னணி’ ஆர்ப்பாட்டம்!

Reporters Diary சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
hindumunnani vilson - 2026

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் என்பவரை படுகொலை செய்த பயங்கரவாதிகளை கண்டித்தும், இந்த வழக்கை NIA ஏற்று விசாரணை நடத்த வலியுறுத்தியும், குமரி மாவட்ட இந்துமுன்னணி சார்பாக படந்தாலுமூடு டிப்போ முன்பிருந்து மௌன ஊர்வலமும் களியக்காவிளையில் மாபெரும் ஆர்பாட்டமும் நடைபெற்றது.

ssi wilson hm - 2026

இதில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் தலைமை வகித்தார். இந்துமுன்னணி மாநில பொதுச் செயலாளர் அரசுராஜா பாஜக மாநில துணை தலைவர் M.R.காந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

hindumunnani vilson2 - 2026

இதில் ஆர்.எஸ்.எஸ்., பரிவார் அமைப்பின் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.