ஸ்ரீரங்கத்தில் இன்று…

Published:

srirangam ranganathar - 2026

ஸ்ரீ.ரங்கநாதர் திருக்கொயில், ஸ்ரீரங்கம், இராப்பத்து ஐந்தாம் நாள் (10.01.2020 )

இன்று மாலை 1.00 மணிக்கு பரமபத வாசலிலிருந்து ஸ்ரீ.நம்பெருமாள் புறப்பாடு கண்டருளி, சந்திர புஷ்கரணி அருகிலும், மணல் வெளியிலும் உபயதாரர்களுக்கு மரியாதைகள் ஆகி, மணல் வெளியில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ.நம்மாழ்வார், ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார், ஸ்ரீ.இராமாநுசர் இவர்களுடன் சேர்ந்து ஆயிரங்கால் மண்டபத்திற்கு முன்புள்ள மணல் வெளியில் எழுந்தருளினார்.

srirangam rangaraja1 - 2026

ஆயிரங்கால் மண்டபத்திற்கு முன்புள்ள மணல் வெளியில் எழுந்தருளியிருந்த மற்றைய ஆழ்வார்களுக்கும், ஆச்சாரியர்களுக்கும், ஸ்ரீ.நம்மாழ்வார், ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார், ஸ்ரீ.இராமாநுசர் ஆக எல்லோருக்கும் பெருமாள் கொடுத்த மாலைகள் சாற்றப்பட்டு ஸ்ரீ.சடகோபன் ஸாய்க்கப்பட்டது. பின்னர் மணல் வெளியில் ஸ்ரீ.நம்பெருமாள் பத்தி உலாத்தல் கண்டருளினார்.

srirangam rangaraja - 2026

பின்னர் அரையர் ஸேவையுடன் ஆயிரங்கால் மண்டபத்திற்குள் எழுந்தருளினார்.

இன்று இரவு வரை ஸ்ரீ.நம்பெருமாள் , ஆழ்வார்கள், ஆச்சாரியர்களுடன் அற்புத ஸேவை ஸாதித்துக் கொண்டிருப்பார்.

  • ராகவன் நெம்மேலி விஜயராகவாச்சாரி

Related articles

Recent articles

spot_img