
மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றவர் நல அமைப்பு சார்பில், தொடர் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்று, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோஷமிட்டனர்.
2015 முதல் வழங்க வேண்டிய அகவிலைப் படி உயர்வினை நிலுவையுடன் வழங்க வேண்டும் , ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , ஓய்வுபெறும் நாளன்றே பணப்பலன்களை வழங்கு,
1.4.2003க்குப் பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களை பழைய பென்ஷன் திட்டத்தில் இணைத்திட வேண்டும்,
நீதிமன்ற தீர்ப்புகளை முறையாக அமல்படுத்து உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், அதன், மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில், இந்த தொடர் காத்திருக்கும் போராட்ட
நடைபெற்றது.
இதில், தேவராஜ் மாநில துணை பொதுச் செயலாளர் சிறப்புரை ஆற்றினார். இந்த தொடர் காத்திருக்கும்
போராட்டத்தில், மதுரை திண்டுக்கல் மற்றும் எஸ்.இ.டி.சி. மதுரை நிர்வாகிகள், ஆண்கள் ,பெண்கள் சுமார் 1500-க்கு மேற்பட்டோர் இந்த தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீடியோ செய்தி: