இம்ரானுக்கு ஆதரவாக பிரசாரம்! பேராசிரியரை மண்டியிட வைத்த ஏபிவிபி மாணவர்கள்!

Published:

abvp students professor - 2026

பெங்களூரு: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்த கர்நாடக மாநில பேராசிரியருக்கு ஏபிவிபி., அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மண்டியிட வைத்து தண்டனை வழங்கினர்.

கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் சந்தீப் வத்தார். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இம்ரான் கானுக்கு ஆதரவாக பிரார்த்திப்பதாகவும், மத்தியில் ஆளும் பாஜக, அரசை கடுமையாக விமர்சித்தும் கருத்துப் பதிவு செய்திருந்தார்.

இது மாணவர்கள் மத்தியில் பெரும் இதனை கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல் தொடர்பாக நாட்டுக்கு எதிரான கருத்தை பிரசாரம் செய்ததால் கடும் கோபம் அடைந்தனர் மாணவர்கள்.

இந்நிலையில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதை அடுத்து, அவரை முழங்கால் போடச்சொல்லி நாட்டுக்கு எதிராக இனி பேச மாட்டேன் எனச் சொல்ல வைத்து, மன்னிப்பு கேட்க வைத்தனர். பின்னர் அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

[su_highlight]பெங்களூர் #நகர்புற_நக்சலைட் பேராசிரியர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை புகழ்ந்தும் இந்தியாவை தரம் தாழ்த்தியும் பாரத பிரதமர் மோடியை தாக்கியும் கருத்துகள் எழுதியவர். ABVP அவரை #மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்தது.[/su_highlight]

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img