“இந்தா விடுதலை…” சொல்லிக் கொண்டே ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் தில்லி பல்கலை., மாணவன் காயம்!

சற்றுமுன்
student shot injured - 2026

தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிசூடு நடைபெற்றுள்ளது. CAA சட்டத்திற்கு மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் மர்மநபர் துப்பாக்கி சூடு நடத்தியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம் என தகவல் வெளியாகி யுள்ளது. தில்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருப்பு மேலாடை அணிந்த அந்த நபர் “இதோ எடுத்துக் கொள்ளுங்கள் விடுதலை” என்று கூச்சலிட்டபடியே துப்பாக்கியால் சுட்டார். இதில் மாணவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார். காயம் அடைந்த அந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த வீடியோ சமூகத் தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நபர் சுட்டதில் மாணவனுக்கு கை, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து துப்பாக்கியால் சுட்ட அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.