மூன்றாவது கண்… 2 லட்சத்துக்கும் மேல் இருக்காம்… சென்னையில்!

சென்னை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
cctv cameras chennai - 2026

சென்னை மாநகரத்தில் பெருகிவரும் குற்றங்களை தடுப்பதற்கு மூன்றாவது கண் எனப்படும் சிசிடிவி கேமராக்கள் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என்பது குறித்து சென்னை மாநகர காவல்துறை சார்பில் ஒரு குறும்படம் ஒன்று வெளியிடப் பட்டுள்ளது…

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஏ.கே. விஸ்வநாதன் பதவி ஏற்ற பிறகு சுமார் 2 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருதப்பட்டுள்ளன! வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பள்ளிகள் கல்லூரிகள் சாலைகள் என பொருத்தப்பட்டுள்ள இந்த மூன்றாவது கண் 24/7 நம்மை கண்காணிக்கிறது!

இதன் காரணமாக அங்கும் இங்கும் நடக்கக் கூடிய சில கொள்ளைச் சம்பவங்கள் செயின் பறிப்பு சம்பவங்கள் இருசக்கர வாகன கொள்ளை மற்றும் விபத்து ஆகியவை துல்லியமாக சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் குற்றவாளிகளை பிடிக்க துணைபுரிவதாக அந்த குறும்படத்தில் விளக்கப்பட்டுள்ளது!

சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு சென்னை மாநகரத்தில் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது என்பது பொதுமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! அந்த குறும்படத்தை சென்னை மாநகர காவல்துறை தயாரித்து வெளியிட்டுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.