
கூழ் கிண்டி தோசை
தேவையான பொருட்கள்: இட்லி அரிசி. – 200 கிராம், எண்ணெய், உப்பு. – தேவையான அளவு.
தாளிக்க:
இஞ்சி. – ஒரு சிறிய துண்டு, கடுகு, சீரகம். – தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று பெரிய வெங்காயம் – ஒன்று, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
இட்லி அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். ஒரு கரண்டி மாவைத் தனியாக எடுத்து நன்கு கரைத்து வாணலியில் ஊற்றிக் கெட்டியாகக் கிளறவும். மீதமுள்ள மாவுடன் கிளறிய மாவைப் போட்டு உப்பு சேர்த்து நன்கு கரைக்கவும். இஞ்சியைத் தோல் சீவிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் இதை மாவுடன் சேர்த்துக் கலந்துகொள்ளவும். தோசைக் கல்லைச் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை ரவாதோசைக்குக் கரைப்பது போல் கரைத்துப் பரவலாக ஊற்றவும். சுற்றிலும் சிறிதளவு எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு: உளுந்து இல்லாமல் செய்யப்படும் இந்த தோசைக்கு சட்னி, இட்லி மிளகாய்ப் பொடி சிறந்த காம்பினேஷன்.