
கான்பூரின் ரட்டுபுர்வா பகுதியில் டிரைவராக இருக்கும் முகேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார்.
இட்டாலி என்ற கிராமத்தை சேர்ந்தவர்.. அதே ஊரை சேர்ந்தவர்தான் இவர் மனிஷா. இவர்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம்தான் ஆகிறது.
ஆனால், குடும்பம் நடத்த போதுமான வருமானம் இல்லை.. இதனால் கல்யாணம் ஆனது முதலே வீட்டில் பண பிரச்சனை இருந்துள்ளது. அது பல பிரச்சனைகளை கொண்டு வந்துவிட்டுள்ளது.. இந்த சமயத்தில்தான் மனிஷா கர்ப்பமானார்.ண எனவே, பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்.
சென்ற மாதம் மனிஷாவுக்கு குழந்தையும் பிறந்தது.. ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், மனைவியை அழைத்து கொண்டு வர முகேஷ் மாமியார் வீட்டுக்கு சென்றார். ஆனால், மாமியாரும், மாமனாரும், வறுமையை காரணம் காட்டி தங்கள் மகளை, அனுப்ப முடியாது என்று சொல்லிவிட்டனர்.
இதன்பிறகு முகேஷ், மனிஷாவிடம் சென்று, நீ இல்லாமல் என்னால் தூங்க முடியவில்லை. என்கூட இப்பவே கிளம்பி வா” என்று குடும்பம் நடத்த அழைத்தார். அப்போதும் மனிஷா வரமுடியாது என்று சொல்லிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த முகேஷ்,தன் மாமியாரின் வீட்டை பெட்ரோல் ஊற்றியே நெருப்பு வைத்து எரித்துவிட்டார்.
இந்த தீயில், மனிஷா, அவரது அப்பா ஹீராலால், அம்மா ஷிவகுமாரி, அண்ணன் மனிஷ், தங்கைகள் உமா, ராதா மற்றும் வந்தனா உள்ளிட்ட 7 பேரும் தீயில் சிக்கி கொண்டனர். உடம்பெல்லாம் நெருப்பு பற்றிய நிலையில், அவர்கள் அலற, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் பலரது நிலைமை சீரியஸாக இருக்கிறதாம். முகேஷ் இப்போது போலீசின் பிடியில் உள்ளார்!