
வலிமை பட ஷூட்டிங் இடையே கிடைத்த நேரத்தில் தனக்கு மிகவும் பிரியமான டுகாட்டி பைக்கில் 5 ஆயிரம் கி.மீ தூரத்தைக் கடந்து அசர வைத்துள்ளார் தல அஜித்.
தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது பூனே பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பூனே ஷெட்யூலை நிறைவு செய்த அஜித் தனக்குப் பிரியமான டுகாட்டி பைக்கில் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு லாங் ரைட் செல்லலாம் என முடிவு எடுத்துள்ளார். பூனே-விலிருந்து சிக்கிம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 2,500 கி.மீ தொலைவிலான நீண்ட நெடு சாலை.
இதில் தனது பைக் பயணத்தைத் தொடங்கிய நடிகர் அஜித் நடுவில் சாலை ஓரத்தில் ஒரு உணவகத்தில் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுத்து அசத்திய செய்தி தான் நேற்றைய வைரல் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.

பைக் ரைட்-ன் நடுவே காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்துள்ளார் அஜித். காசியில் இருந்து நேராக சிக்கிம் சென்று தனது பைக் பயணத்தை நிறைவு செய்தார்.
அதன் பின்னரும் தனது டுகாட்டி பைக்கிலேயே சிக்கிம்லிருந்து சென்னை வரை அனது 2,500 கிமீ தூரத்தை அசாதாரனமாகக் கடந்து உள்ளார் அஜித். ஃபிட்னஸ் முதல் தனது எளிமையான நடவடிக்கைகள் வரை அத்தனை விதங்களிலும் ரசிகர்களைத் தொடர்ந்து ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கிறார் தல அஜித்.