
மோர்க்கூழ் ரைஸ் கேக்
தேவையான பொருட்கள்: இட்லி அரிசி – 200 கிராம், மோர் மிளகாய் – 4, புளித்த மோர். – 200 மில்லி, பெருங்காயத்தூள் – சிறிதளவு, நல்லெண்ணெய். – 50, மில்லி இட்லி மிளகாய்ப் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
இட்லி அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். அரைத்த மாவுடன் புளித்த மோர், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து 300 மில்லி தண்ணீர்விட்டுக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதனுடன் மோர் மிளகாயையும் கிள்ளிப் போட்டு வறுக்கவும். மோர் மிளகாய் வறுபட்டதும் கரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாகக் கிளறவும். கையில் ஒட்டாமல் மாவு கெட்டியாக வரும்போது அதனுடன் இட்லி மிளகாய்ப் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஒரு தட்டில் சிறிதளவு எண்ணெய் தடவி அதில் தயாரித்த மாவைப் பரவலாக போட்டு ஆறவிடவும். மாவு ஆறியதும் சிறு துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.
குறிப்பு: முதல் நாளே மாவை அரைத்துப் புளிக்கவைத்து, மோர் சேர்க்காமல் செய்யலாம். இதில் மோர் மிளகாயும், இட்லி மிளகாய்ப் பொடியும் இருப்பதால் சைடிஷ் தேவையில்லை