விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி! நேர்ந்த விபரீதம்.. கதறும் பெற்றோர்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி
pantisri
pantisri

திருச்சி மாவட்டம் விமான நிலையம் அருகே ராஜமாணிக்கம் பிள்ளை நகரை சேர்ந்த கார் ஓட்டுநராக வேலைபார்த்து வரும் சக்திவேல் என்பவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவரது வீட்டிற்கு அருகே வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் தோண்டப்பட்டு இருந்த குழியில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனை அடுத்து இந்த கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் சக்திவேல் மகள் 5 வயதான பாண்டிஸ்ரீ என்கிற குழந்தை விளையாடி கொண்டிருந்துள்ளாள். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் குழந்தையை காணவில்லை.

இதனால் அந்த குழந்தையின் பெற்றோர் பல இடங்களில் தேடி உள்ளனர். பிறகு அந்த கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் தேடியபோது அங்கு மழை நீர் தேங்கி உள்ள குழியில் குழந்தை கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதனை அடுத்து சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதனை அடுத்து போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.