பாஜக.,வில் இணைந்த இயக்குனர் பேரரசு!

Published:

pon radhakrishnan perarasu - 2026

இயக்குனர் பேரரசு இன்று தன்னை பாஜக.,வில் இணைத்துக் கொண்டார். இது குறித்து .. முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்…

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைத்து திரைப்பட இயக்குனரும், இயக்குனர் சங்க பொருளாளரும், சிறந்த தேசியவாதியுமான பேரரசு இன்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தேசப் பணியால் ஈர்க்கப் பட்டு தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டதாக பேரரசு தெரிவித்தார். பொன். ராதாகிருஷ்ணன் பா.ஜ.க.வில் இணைந்த அவருக்கு கட்சி உறுப்பினர் அட்டையை வழங்கி, பிரதமர் நரேந்திர மோடியின் உன்னத திட்டத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சிறப்புற பணியாற்றிட வாழ்த்தினார்.

Related articles

Recent articles

spot_img