அரசவல்லி சூரியநாராயணர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
arasavilli suryanarayana temple - 2026

சாயா, உஷா பத்மினி சமேத ஸ்ரீ சூரிய நாராயண சுவாமி தேவாலயம் ஆந்திர பிரதேசம் அரசவல்லியில் உள்ளது. பத்ம புராணத்தின்படி மக்களின் நலத்திற்காக காஸ்யப மகரிஷி இந்த ஆலயத்தில் விக்ரஹ பிரதிஷ்டை செய்தார் .

வரலாற்றுச் சான்றுகளின்படி அரசவல்லியில் ஸ்ரீசூரிய ஆலயத்தை கலிங்க அரச வம்சத்தினரான கிழக்கு கங்கராஜாக்களில் முக்கியமானவரான தேவேந்திர வர்மா 545ல் நிர்மாணித்தார்.

சகல பக்தர்களுக்கும் பாதுகாப்பையும் ஆயுள் ஆரோக்யத்தையும் அருளும் ஸ்ரீசூர்ய நாராயணர் ஆறு கரங்களோடும் அபய முத்திரையுடனும் காட்சி அளிக்கிறார்.

தினமும் பக்தர்களால் நிரம்பி வழியும் இந்த ஆலயத்திற்கு ரதசப்தமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர். பக்தர்களின் நெரிசலில் கோயில் திக்குமுக்காடிப் போயுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.