சீனாவிலுள்ள கிளைகளை மூடுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு!

Published:

applestoreinchina - 2026

சீனாவில் செயல்பட்டு வரும் ஆப்பிள் கிளைகளை பிப்ரவரி 9ஆம் தேதி மூடுவதாக ஆப்பிள் நிறுவனம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் இருந்து பரவியுள்ள புதிய வகை கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை பலியானவா்கள் எண்ணிக்கை 259-ஆக அதிகரித்துள்ளது. 11,791 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனா்.

இந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை காரணங் களுக்காக சீனாவில் செயல்பட்டு வரும் அதன் கிளை களை பிப்ரவரி 9ஆம் தேதி மூடுவதாக ஆப்பிள் நிறுவனம் சனிக்கிழமை அறிவித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் உள்ள தங்களது பணியாளர்களையும் சீனா செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

பாதிப்பு குறைந்த பின்னர் கிளைகள் முழுவதையும் சுத்தம் செய்யப்போவதாகவும் கூறியுள்ளது. இருப்பினும் ஆன்லைன் வர்த்தகம் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img