
புது தில்லி: மத்தியில் ஆளும் பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது.
ஆந்திராவுக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து அளிக்காததால் சந்திரபாபு நாயுடு அதிருப்தி அடைந்தார். மத்திய அரசில் பாஜக., முன்னர் 90:10 என்ற அளவில் மாநிலத்துக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் சிறப்பு அந்தஸ்து என்று உறுதி மொழி அளித்திருந்ததை மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் இருந்து தனது கட்சியின் இரு அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்தார். ஆனால் கூட்டணியில் நீடிப்பதாக அறிவித்திருந்தார். இந் நிலையில் மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு மக்களவையில் 16 உறுப்பினர்களும், மாநிலகளவையில் 6 எம்பிக்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.



