பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்!

கல்வி சற்றுமுன் தமிழகம்

exam hall - 2026

சென்னை: வெள்ளிக்கிழமை இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகின்றன.

இந்தத் தேர்வை 4,83,120 மாணவர்கள், 4,81,371 மாணவிகள், 36,649 தனித் தேர்வர்ககள் என 10,01,140 பேர் எழுதுகின்றனர். இதற்காக 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்க 6,900 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோர் தேர்வு மையங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்வர் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் பள்ளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.