தனிச் சிறப்பு மிக்க பொங்கல் பெருவிழா சிறப்பாக கொண்டாட பொங்கல் வாழ்த்து! முதல்வர்!

சற்றுமுன்
cm - 2026

தமிழர் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வமும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாள் எனப் போற்றப்படும் தனிச் சிறப்பு மிக்க பொங்கல் பெருவிழாவை உலகமெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் தமிழர்கள் அனைவருக்கும் எங்கள் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

தமிழகத்தின் பொங்கல் புதுநாள் போன்றதோர் பொன்விழா இந்த வையகத்தில் வேறெங்கும் இல்லை அகமகிழ்ச்சியுடன் போலிப் பூச்சுகளின்றி ஆனால் புதியதோர் பொலிவுடன் வீட்டில் உள்ள் அனைவரும் கலந்துரையாடி மகிழ்ந்திருக்கும் நமது பொங்கல் புதுநாளுக்கு ஒப்பான விழா எங்கும் இல்லை என்று பூரிப்புடன் நமது அறிவுலக ஆசான் பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்

பொங்கல் விழா நம்மை எல்லம் தலைநிமிரச் செய்யும் தமிழர் விழா குடும்பம் குடும்பமாக அன்புடன் வளர்க்கும் பசுவும் கன்றும் ஒருசேர தங்கள் அன்புக்குரல் எழுப்ப எல்லோரும் கொண்டாடி மகிழ்வோம். என்று அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.