“தேர் இழுத்த திருமேனி” (பள்ளத்தில் இறங்கின தேர்) (பெரியவா கரத்தால் பற்றி நிலைக்கு வந்த அதிசயம்)

Published:

“தேர் இழுத்த திருமேனி”

(பள்ளத்தில் இறங்கின தேர்) 18194655 1539007332811093 2764588660202570986 n 1 - 2026

(பெரியவா கரத்தால் பற்றி நிலைக்கு வந்த அதிசயம்)

சொன்னவர்;T.A.சுவாமிநாதன். திருவிடைமருதூர்.
தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
.

1933-ல் திருவிடைமருதூரில் தைப்பூசத் திருவிழா! எட்டாம் நாள் தேர் உலா. கொல்லன்கோடி மூலையைத் தேர் அடைந்தபோது, முட்டுக் கட்டைகள் நசுங்கியதால், தேர் நேரே வடம்போக்கித் தெருவழிச் சென்று பள்ளத்தில் இறங்கிவிட்டது.

அந்த ஆண்டு கும்பகோணம் மஹாமகத்திற்கு விஜயம் செய்த ஸ்ரீ சுவாமிகள் புனித நீராடலை முடித்துக் கொண்டு திருவிடைமருதூருக்கு வந்து பச்சையப்பன் தெருவில் தங்கினார்கள்.

மஹாலிங்க சுவாமி தேர் தடைப்பட்டு நிற்பதைக் கேட்டறிந்த பெரியவா. . திடீரென்று எழுந்து புறப்பட்டு வேகமாக நடக்கலானார்கள். மக்களும் கூடவே பின்தொடர்ந்தனர். பெருங்கூட்டமே சேர்ந்து விட்டது

.ஸ்ரீ சுவாமிகள் தேர் இருந்த இடத்தையடைந்து மஹாலிங்கேஸ்வரரைச் சுற்றிவந்து தரிசித்தார்கள்.

பிறகு தேரின் வலப்புறமாகச் சென்று நின்று, தேரின் வடத்தைத் தம் கரத்தால் பற்றி ,கூடியிருந்த மக்களைப் பார்த்து, ஒன்றாகத் தேரை இழுக்குமாறு உரக்கப் பணித்தார்கள். இதற்குள் கோயில் அதிகாரிகள், பணியாளர்கள் வந்து கூடினர்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.15 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

எங்கிருந்து வந்ததோ இவ்வளவு வேகம்?

என்று ஆச்சரியப்படும் வகையில் மக்கள் ஆரவாரத்துடன் இழுக்கலாயினர். தேர் பள்ளத்திலிருந்து மேலே வந்தது. உற்சாகத்துடன் இழுத்தனர் மக்கள்..தேரும் வேகமாகச் சென்றது. அன்று மாலை வடக்கு வீதிவரை சென்றது. மறுநாளும் மக்களை வருமாறு சொல்லிய ஆசார்யாளின் உத்தரவை உரத்த குரலில் அறிவித்தனர்.

மறுநாள் தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. ஸ்ரீ பெரியவர்கள் மஹாலிங்க மூர்த்தியுடன் ஆலயத்திற்குச் சென்று மூலவரையும் ,அம்பாளையும் தரிசித்துவிட்டுத் திரும்பினார்கள்.

Related articles

Recent articles

spot_img