December 6, 2025, 4:49 PM
29.4 C
Chennai

“சுவாமிக்கு (பெரியவாளுக்கு) வேண்டிண்டதை நாம மறந்தாலும், சுவாமி மறக்காம வாங்கிக்கும்!”(வாங்கிக்கொண்டதை திருப்பிக் கொடுத்த பெரியவா)-

“சுவாமிக்கு (பெரியவாளுக்கு) வேண்டிண்டதை நாம மறந்தாலும், சுவாமி மறக்காம வாங்கிக்கும்!”

(வாங்கிக்கொண்டதை திருப்பிக் கொடுத்த பெரியவா)– (மெய் சிலிர்க்கும் சம்பவம்).

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்17861559 1517108385000988 5242240015705989905 n - 2025
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் பக்தி
(சுருக்கமான ஒரு பகுதி)

பழையனூர் என்ற ஊர்ல மகாபெரியவாளோட பக்தர் ஒருவர் மாசத்துக்கு ஒருதரமாவது பெரியவாளை தரிசனம் பண்ண வந்துடுவார். சொந்த ஊர்ல வேலை பார்த்துண்டு இருந்த அவரை சென்னைக்குப் பக்கத்துல வேலை மாத்தல் பண்ணி உத்தரவு வந்துடுத்து.

பட்டணம் வந்ததும் வாங்கின சம்பளத்துல செலவெல்லாம்போக மிச்சம் பார்த்த அவருக்கு இங்கே கைக்கு வாங்கறது வாய்க்கும் வயத்துக்குமே சரியா இருந்தது.

மாசத்துக்கு ஒருதரம் பெரியவாளை தரிசனம் பண்ணினவர்ஆறேழு மாசத்துக்கு ஒருதரம்கூட வரமுடியலை. பொருளாதார நிலைமை ரொம்ப குறைஞ்சுண்டே போச்சு.

ஒருநாள் காதுல போட்டுண்டு இருந்த கடுக்கனையும்கழட்டி விற்கிற நிலைமை வந்திருக்கு.அப்ப ரொம்பவே மனசு உடைஞ்சு போனவர், பரமாசார்யா படத்துக்கு முன்னால நின்னு, “இப்படி ஒரு நிலை எனக்கு வந்துடுத்தே…பகவானே நீங்க பார்த்துண்டு இருக்கலாமா? பாரம்பரியமா போட்டுண்டு இருக்கிற இந்த கடுக்கன் யாரோ ஒருத்தரோட கைக்குப் போகப்போறதே. இதை மட்டும் விற்க வேண்டாதபடிக்கு என்னோட கஷ்டம் தீர்ந்துதுன்னா, இதை உங்ககிட்டேயே சமர்ப்பிச்சுடறேன்..!” அப்படின்னு கதறி அழுதிருக்கார்.

கொஞ்சநேரத்துக்கெல்லாம், அவர் வேலைபார்த்த இடத்துல இருந்து ஒரு ஆள் வந்து, “சார் முதலாளி ஒங்களைஉடனேகூட்டிண்டுவரச்சொன்னார்”.அவரும் உடனே போனார்

அவர் இடத்துக்குப் போட்ட புது ஆள்,கணக்கெல்லாம் தப்புத்தப்பா எழுதி வைச்சிருக்கானாம். உடனடியா சரி பண்ணியாகணும்,அதனால உங்க பழைய இடத்துக்கே மாற்றியுள்ளேன். பயணப்படி இத்யாதிக்கெல்லாம் பணம்தரச் சொல்லியிருக்கேன்-முதலாளி

பரமாசார்யாளை வேண்டின அடுத்த க்ஷணமே தன்னோடமொத்த கஷ்டமும் க்ஷீணமாவிட்ட சந்தோஷத்தோடு மளமளன்னு புறப்பட்டுப் போய் சேர்ந்தார்.

அப்படியே ஆறேழு மாசம் நகர்ந்தது.பரமாசார்யாளை அவர் பார்க்க வர்றதும் குறைஞ்சுது.ஒரு நாள் திடீர்னு அவருக்கு காதுல லேசா வலிச்சிருக்கு.பொறுக்கவே முடியாதபடிக்கு வலி அதிகரிச்சு டாக்டரைப் பார்க்க போயிருந்தார். நிறைய பரிசோதனை பண்ணிவிட்டு “இது கொஞ்சம் சிவியரா இருக்கும்னு நினைக்கிறேன். அநேகமா ஆபரேஷன் பண்ண வேண்டியிருக்கலாம். அதனால சென்னைக்குப் போய் பெரிய டாக்டர் யாரையாவது பாருங்கோ”ன்னு சொன்னார் டாக்டர்.

பதறி அடிச்சுண்டு சென்னைக்கு வந்தவர், பிரபல டாக்டர் ஒருத்தர்கிட்டே காட்டியிருக்கார். அந்த டாக்டரும் ஆபரேஷன் பண்ணியே ஆகணும்னுசொல்லிட்டு, “நாளைக்கு கார்த்தால வந்து அட்மிட்ஆகிடுங்கோ..! அப்படி வர்றச்சே கடுக்கனைக் கழ்ட்டி பத்திரமா வைச்சுட்டு வந்துடுங்கோன்னு சொல்லி இருக்கார் டாக்டர். அப்போதான் ஒரு விஷயம் மனசுக்குள்ளே ஞாபகம் வந்திருக்கு.

“அடடா..கஷ்டமெல்லாம் தீர்ந்தா கடுக்கனை சமர்ப்பிக்கறதா வேண்டிண்டோமே. அதை செலுத்தவே இல்லையே.கழட்டறதே கழட்டறோம் கடுக்கனை கையோடு எடுத்துண்டுபோய் ஆசார்யா கிட்டேகுடுத்துட்டு வந்துடுவோம்”னு நினைச்சவர் அவசர அவசரமாக காஞ்சிபுரம் புறப்பட்டுட்டார்.

சில வேதவித்துகள் போகிற வழியில் பெரியவாளை தரிசிக்க மடத்துக்கு வந்தார்கள்.அவாளுக்கெல்லாம் குங்குமத்தோட ஆளுக்கு ஒரு பழமும் கொடுத்த பெரியவா கொஞ்சம் இளைஞரா இருந்த ஒருத்தரை மட்டும், “நீ கொஞ்ச நேரம் இரு,அப்புறம் போகலாம்!” என்றார். அவர்கள் சேர்ந்து வந்ததனால்,எல்லாரும் மடத்துல ஒரு இடத்தில் போய் உட்கார்ந்திருந்தா.

கொஞ்சநேரம் ஆச்சு. காதுவலி பக்தர் அங்கே வந்தார். தான் வேண்டிண்ட முதல் காது ஆபரேஷன் வரைஎல்லாத்தையும் சொல்லி, கடுக்கனை ஒரு மூங்கில்தட்டுல வைச்சு பெரியவாளிடம் வைத்தார்.

பெரியவாஒரு ஆரஞ்சு பழம் தோலை உறிச்சு,அந்த பழத்தை பக்தர்கிட்டே குடுத்து வழி அனுப்பினார்.

அடுத்ததா தன் பக்கத்தில் இருந்த ஒருத்தர்கிட்டே “வேத வித்துகள்ல இளைஞரா இருந்தவரை கூப்பிடச் சொன்னார்!”

“என்ன, நேத்திக்கு வேதமந்திரம் சொல்றச்சே இவாள்லாம்காதுல கடுக்கன் போட்டுண்டு இருக்கா. நமக்கு வசதி இல்லாம வேப்பங்குச்சியை செருகிண்டு இருக்கோமேன்னு மனசுக்குள்ளே குறைப்பட்டுண்டியா? இந்த இதை எடுத்துண்டுபோய் சுத்திபண்ணிப் போட்டுக்கோ”பக்கத்தில் இருந்த கடுக்கன்களைக் காட்டிச் சொன்னார்.

எல்லோருக்கும் ஆச்சர்யம்.இளைஞர் கண்ணுலேர்ந்து ஆனந்த பாஷ்பம் வழிஞ்சது.

இவனுக்கு தரலாம்னு எப்படி முன்கூட்டியே தீர்மானிச்சார்? பெரிய ஆச்சரியம்னா, அதைவிட பெரிசா இன்னொண்ணு அடுத்த நாளே ஏற்பட்டது.

ஆபரேஷன் பண்ணிகறதுக்காக ஆஸ்பத்திரிக்குப் போனவர்த ன்னோட வலி கொஞ்சம் குறைஞ்சிருக்கிறதை உணர்ந்து டாக்டர்கிட்டே சொன்னபோது, எதுக்கும் இன்னொருதரம்செக் பண்ணினடாக்டர்,ஆபரேஷனேவேண்டாம். சாதாரணமருந்துல குணமாகிவிடும்ன சொல்ல, அதே மாதிரி குடுத்த சொட்டு மருந்துல ஒரு வேளைலே அவர் காதுவலி காணாமப் போயிடுத்து

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories