மாணவி தற்கொலை விவகாரம்; இந்து முன்னணி போராட்டத்தால்… வழக்குப் பதிவு!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்
nellai hindumunnan2 - 2026

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள குழந்தை ஏசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவி பேச்சியம்மாள். பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், பள்ளி நிர்வாகம் மீதும் ஆசிரியர்கள் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்ய மறுத்து வந்த நிலையில் மாணவியின் குடும்பத்தினர் உடலை வாங்காமல் நீதி வேண்டி போராடி வருகின்றனர்!

இந்தப் பிரச்னை குறித்து எந்த அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளாத நிலையில் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் டாக்டர். அரசுராஜா தலைமையில் இந்துமுன்னணி நிர்வாகிகள் மாநில செயலாளர் கா.குற்றாலநாதன், கோட்ட தலைவர் தங்கமனோகர் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தினை முற்றுகை இடும் போராட்டத்தை அறிவித்தனர்.

pechiammal - 2026

இந்துமுன்னணி களம் இறங்கியதை அடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விரைவாக இயங்கத் தொடங்கியது. காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாரத் இந்துமுன்னணி நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு வழக்கு விசாரணயை மாற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தற்போது உத்திரவிட்டுள்ள தாகவும், எந்த அரசியல் அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல் சிறுபான்மை என்ற பெயரில் குற்றவாளிகள் யாரும் தப்பிக்காமல் நேர்மையைக நியாயமாக விசாரணை நடைபெறும் என்றும் குற்றவாளிகளை விரைவில் நிச்சயம் கைது செய்வோம் என்றும் உறுதி கூறினார்.

பின்னர் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் த.அரசுராஜா, மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் உள்ளிட்ட இந்துமுன்னணி நிர்வாகிகள் மாணவியின் இல்லத்திற்குச் சென்று பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது மாணவியின் தந்தை, தாய், சகோதரி உள்ளிட்ட உறவினர்கள் கண்ணீர் மல்க மாணவி பேச்சியம்மாள் தொடர்ந்து குந்தை ஏசு பள்ளி நிர்வாகத்தால் துன்புறுத்தப்பட்டது குறித்து கதறிய படியே கூறினர்.

nellai hindumunnan3 - 2026

ஆசிரியை லூர்து டெய்சி மற்றும் கன்னியாஸ்திரி ஒருவர் ஆகியோர் தான் மாணவியை கடுமையாக துண்புறுத்திய தாகவும் தெரிவித்தனர். பள்ளியில் இது போல் பல மாணவிகள் துன்புறுத்தப் பட்டுள்ளதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். எங்களை விலை பேசப் பார்க்கிறார்கள். எங்களுக்கு நீதி வேண்டும். இனி இவ்வாறு ஒரு குழந்தை உயிர் போகக் கூடாது. குற்றவாளியை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றனர்.

இந்துமுன்னணி பேரியக்கம் உங்கள் தர்ம போராட்டத்திற்கு துணை நிற்கும் என்று அதன் நிர்வாகிகள் கூறினர். தொடர்ந்து நான்காவது நாளாக இந்தப் போராட்டம் தொடர்கிறது. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமைக்குள் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்படாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தி மாநிலம் முழுவதும் கொண்டு செல்வது குறித்து இந்து முன்னணி முடிவு செய்யும் என்று மாநில பொதுச்செயலாளர் டாக்டர் அரசுராஜா தெரிவித்தார்.

இந்துமுன்னணி வழக்கறிஞர்கள் ப.சிதம்பரம் , தங்கதுரை , ஆ.ராஜா, முத்து சிதம்பரம், குமரேசன், L.T.தாஸ் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் முருகேசன் மாநகரச் செயலாளர் சிவா மாநகர செயற்குழு உறுப்பினர் ராஜசெல்வம் உள்ளிட்ட இந்துமுன்னணி நிர்வாகிகள் இந்தப் போராட்டத்தின் போது உடன் இருந்தனர்.

nellai hindumunnan1 - 2026

இந்த நிலையில், செய்துங்கநல்லூர் மாணவி பேச்சியம்மாள் தற்கொலை வழக்கை தற்கொலைக்குத் தூண்டியது என்ற பிரிவின்(306) கீழ் மாற்றம் செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டதாகவும், வழக்கில் ஆசிரியைகள் டெய்சி மற்றும் கேத்தரின் அகிய இரண்டு பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக செய்துங்கநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாகத் தெரிவித்துள்ளனர். மேலும், ஆசிரியைகள் இருவரும் தலைமைறைவாகியுள்ளதாகவும், அவர்களைத் தேடி வருவதாகவும் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.