திடீர் ஜெபவீடு; இந்துமுன்னணி தென்காசி ஆட்சியரிடம் மனு!

உள்ளூர் செய்திகள் நெல்லை
tenkasi jebaveedu - 2026

தென்காசியில் திடீர் ஜெபவீடு எழுப்பப் பட்டு, அமைதியின்மை ஏற்படுவதை சுட்டிக் காட்டி, அது குறித்து புகார் மனு தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப் பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பிப். 3 திங்கள் கிழமை இன்று, மேலநீலிதநல்லூர் ஒன்றியம் குலசேகரமங்கலம் பஞ்சாயத்து ரெங்கநாதபுரம் கிராமத்தில், புதிதாக ஜெயவீடு கட்டுவதைத் தடுக்கக் கோரி மனு அளிக்கப் பட்டது.
தென்காசியில் ஊர்வலமாகச் சென்று, ஆட்சியரிடம் இந்த மனு அளிக்கப் பட்டது .

இந்துமுன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பால்ராஜ், தென்காசி நகரத் தலைவர் இசக்கிமுத்து, நகர பொதுச் செயலாளர் நாராயணன், மேலநீலிதநல்லூர் ஒன்றியத் தலைவர் பரமசிவம், ரெங்கநாதபுரம் கிளை கமிட்டி தலைவர் கே.ராமசந்திரன், ஊர் நாட்டாண்மைகள் எம்.பத்திரகாளி, என்.பழனிசாமி, எஸ்.கருப்பசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, தென்காசி ஆட்சியரிடம் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.