ஹெர்பல் ஆடை: இனி இல்லை தோல் வியாதி!

அடடே... அப்படியா? இந்தியா தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
aaroo - 2026

ஆரோவில் சர்வதேச நகரில் உள்ள சில நிறுவனங்கள் மருத்துவம் சார்ந்த ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.

தியானத்திற்கும், அழகிய கடற்கரைக்கும் புகழ்பெற்றது ஆரோவில் சர்வதேச நகரம். காஸ்மோ நகரமான புதுச்சேரிக்கு அருகில் இந்த இடம் உள்ளதால் இங்கு வெளிநாட்டினரை அதிகமாக காண முடியும்.

ஆரோவில் சர்வதேச நகரில் வேப்ப இலை, துளசி உள்ளி மருத்துவ குணமிக்க பொருட்களால் உருவாக்கப்பட்ட ஆடைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

இங்குள்ள சில நிறுவனங்கள் , மருத்துவம் சார்ந்த ஆடைகளை தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றன. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் இந்த ஆடைகள் வெகுவாக கவர்ந்துள்ளன.

இதனால் இந்த ஆடைகளை அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இந்த மருத்துவ குணமிக்க ஆடைகளால் தேகத் தோல்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று ஆடை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.