கொரோனா வைரஸில் இருந்து காத்துக் கொள்ள… சிங்கப்பூர் அமைச்சரின் அறிவுரைகள்..!

Published:

singapore health minister - 2026

சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சர் கொடுக்கும் அறிவுரைகள்… கொரோனா வைரஸுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும்! கேளுங்கள்…

முகத்துல மாஸ்க் அதாவது முகமூடி போட்டுக்கிட்டா.. அடிக்கடி மூஞ்சில கைய வெச்சி… அட்ஜெஸ்ட் செய்து கொள்ளத் தோணுமாம்… அதனால வைரஸ் தொற்று இருக்குறவங்க மட்டும், அடுத்தவங்களுக்கு வைரஸ் பரவிடக் கூடாதுன்னு முகமூடி போட்டுக்கிட்டா போதுமாம்…

நல்லா இருக்குறவங்க… கைய மூஞ்சி கிட்டே கொண்டு போகக் கூடாதாம். சேர், டேபிள், மற்ற பயன்படுத்தப் பட்ட பொருள்கள்ல இருக்கற வைரஸ், நம்ம கை மூலமா முகத்துக்கு போயி… மூக்குல கண்ணுல கைய வைக்கும் போது… அதன் மூலமா பரவும்கிறார்… அதனால… மூஞ்சில மட்டும் பீச்சாங்கைய இல்ல… சோத்தாங்கையக் கூட கொண்டு போயி வெக்காம… கைய நல்லா சோப்பு போட்டு கழுவிட்டு, அடிக்கடி சுத்தம் செஞ்சிக்கிட்டே இருக்கணும்கிறார்…

கொரோனா வைரஸ் காத்து மூலமா பரவும்னு இதுவரை நிரூபிக்கப் படலையாம்… அது மூக்குல ஒழுகுற சலதோசம், இருமலு, தும்மலு இதுனாலதான் பரவுதுங்கிறார்…

நல்ல விழிப்பு உணர்வு.. மேட்டர்! சிங்கப்பூர் அமைச்சருக்கு வாழ்த்து சொல்லுவோம்…

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

இங்க ஒரு மூடர் கூட்டம் கையெழுத்து வாங்க ரோடுரோடா அலையுதுங்க… அதுங்க பயன்படுத்தின பேனாவை, பேப்பரை, பேடை எல்லாம் நீங்களும் பயன்படுத்தி அந்த பேனாவை வாங்கி எழுதி பேப்பரை பிடிச்சி கையெழுத்தெல்லாம் போட்டீங்கன்னா… உங்களுக்கும் இந்த வைரஸ் தொத்திக்கிடும். அதுக்குப் பிறகு நீங்க கையெழுத்தும் போடமுடியாது கைநாட்டும் வெக்கமுடியாது… நேரா கண்ணம்மாபேட்ட, கிருஷ்ணாம்பேட்ட தான்… ஊஊஊஊஊ தான்! சாக்கிரத!

சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சர் கான் கிம் யாங் பிப்.3ம் தேதி சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அரசின் அதிகாரபூர்வ திட்டங்கள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசியவை..

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img