
ஹிந்து கடவுளரை இழிவாகப் பேசிய, சிறுமுகை காரப்பன் மீது போலீசார் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதை அடுத்து அவர் தலைமறைவானார். இந்நிலையில் அவரை எப்படியும் கண்டுபிடித்து கைது செய்வோம் என போலீஸார் கூறுகின்றனராம்.
கோயமுத்தூர், பீளமேட்டில் திராவிடர் இயக்கத்தினர் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய சிறுமுகை காரப்பன் என்பவர், ஹிந்துக் கடவுளரான கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர் குறித்து இழிவாகப் பேசினார். இது குறித்த வீடியோ பதிவுகள் சமூகத் தளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பையும் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தின.
காரப்பன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜக., மற்றும் ஹிந்து அமைப்பினர் காரப்பன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், சிறுமுகை, கோவை பீளமேடு காவல் நிலையங்களில் புகார்களை அளித்தனர்.
இதை அடுத்து, மதக் கலவரத்தை துாண்டும் வகையில் பேசியது, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டது ஆகிய பிரிவுகளில் பீளமேடு போலீசார், காரப்பன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதனால் காரப்பன் தலைமறைவானதாகக் கூறப் படுகிறது. காரப்பனைக் கைது செய்ய தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப் படுகிறது. ‘தலைமறைவான காரப்பனை விரைவில் கைது செய்வோம்’ என்று பீளமேடு போலீஸார் தெரிவித்ததாகக் கூறப் படுகிறது.

ஆனால், இன்று காலையிலும் கூட காரப்பனின் மொபைல் எண் துடிப்புடன் இருந்தது. போலீஸார் காரப்பனைக் கைது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுபவர்களாக இருந்தால், செல் போன் சிக்னலை வைத்தே அவர் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவிடலாம். எனவே போலிசார் ஏதோ ஒப்புக்கு தாங்கள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக கூறுகின்றனர் என்றே எண்ணத் தோன்றுகிறது.
இதையும் படியுங்க…
தலைமறைவான காரப்பன்..! கைதாவது எப்போது? வழக்கம் போல் ‘சாய்ஸில்’ விட்டுவிடுமா ‘திராவிட’ அரசு?!
‘பரதேசி’ என்ற காரப்பன்… சிறுமுகை கோயிலில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்!
அப்போ… பதவி கொடுத்ததும் பாஜக.,தான்! இப்போ.. கைது செய்யணும்னு கோருவதும் பாஜக.,தான்!


