December 6, 2025, 9:20 PM
25.6 C
Chennai

தொடங்கியது இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை!

vote1 - 2025

இன்று காலை 8 மணிக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. தி.மு.க. இடையே நேரடி போட்டியும், நாங்குநேரியில், அ.தி.மு.க. காங்கிரஸ் இடையேயும், புதுச்சேரி காமராஜ் நகரில் காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் இடையேயும் போட்டி நிலவுகிறது.

84.41 சதவீத வாக்குகள் பதிவான விக்கிரவாண்டி தொகுதியில், 188659 பேர் வாக்களித்துள்ளனர். 66.35 சதவீத வாக்குகள் பதிவான நாங்குநேரியில் 170622 பேர் வாக்களித்துள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதி வாக்கு எண்ணிக்கை ஈ.எஸ். பொறியியல் கல்லூரியிலும், நாங்குநேரி தொகுதியின் வாக்கு எண்ணிக்கை பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிக்கும் வகையில் எல்.இ.டி டிவியும் அமைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி, மொத்தமாக 14 மேசைகளில் 22 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் ஆட்சியில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இத்தொகுதிகளின் முடிவுகள் உள்ளாட்சி தேர்தலை உறுதி செய்யும் என்பதால் தேர்தல் முடிவை தி.மு.க. – அ.தி.மு.க.வினர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பின் நடந்த வேலுார் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் நுாலிழையில் வெற்றி பெற்றது. எனவே இத்தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்தடுத்து வரும் தேர்தலில் மக்கள் ஆதரவை பெற முடியும் என்பதால் தி.மு.க. பலத்த எதிர்பார்ப்புடன் உள்ளது.

இரு தொகுதிகளிலும் வெற்றி பெற அ.தி.மு.க. கடும் முயற்சிகளை மேற்கொண்டது. இதில் கிடைக்கும் வெற்றி உள்ளாட்சி தேர்தலில் உதவியாக இருக்கும் என்பதால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க. தலைமை தேர்தல் முடிவை எதிர்நோக்கி உள்ளது. இந்த இரு தொகுதி வெற்றி – தோல்வி, இரு கூட்டணியின் எதிர்காலத்தை முடிவு செய்வதாகவும் அமையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories