புதுவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி!

சற்றுமுன் சென்னை
congeras pelak - 2026

புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றுள்ளார்.

2 சுற்றுகளைக் கொண்ட காரமராஜர் நகர் தொகுதியில் ஜான்குமார் 14,782 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட என்ஆர்., காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7,611 வாக்குகள் பெற்றுள்ளார்.

அது போல், தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், அதிமுக., முன்னிலை பெற்று வருகிறது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக முன்னிலையில் இருந்து வருகிறது.

நாங்குநேரியில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை அரை மணி நேரம் தாமதமாகவே துவங்கியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.