கன்னியாகுமரியில் கிறிஸ்துவ மதமாற்ற கும்பலுக்கு அறிவுரை கூறிய போலீஸ்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்
kanniyakumari conversion - 2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துவ மதமாற்ற கும்பல்களின் கைவரிசை மிக அதிகம் என்று புகார் கூறப்பட்டு வருகிறது.

சின்னப் பிள்ளைலேர்ந்து நானும் இப்படி கிறிஸ்துவங்க வந்து நோட்டீஸ் கொடுக்குறத பாத்திருக்கேன் வாங்கியிருக்கேன் படிச்சிருக்கேன். ஆனா இன்னிக்கு நீங்க வேன்லாம் பிடிச்சிட்டு வந்து இங்க சங்கமம்னு நடத்திட்டிருக்காங்க. இங்க வந்து கிறிஸ்துவ பிரசாரம்னு வேண்டாத வேலை எல்லாம் செய்யுறீங்க. எதாவது அசம்பாவிதம் ஆச்சுன்னா யாரு பதில் சொல்லுறது. கன்னியாகுமரி மாவட்டத்த பத்தி தெரியும்ல… இனிமே இப்படி வராதீங்க , வரமாட்டோம்னு மன்னிப்பு கேட்டுட்டு போங்க… என்று ஏதோ அவர்களை சமாதானப் படுத்தி அனுப்புவது போல் அனுப்பிவைக்கிறார் இந்தக் காவலர்.

மேக்காமண்டபம் புதியை சார்ந்த பாதிரி கும்பல் இவ்வாறு வந்து தொல்லை செய்வதாகவும், இனிமேல் நாங்க மதமாற்ற பிரசாரம் செய்ய மாட்டோம் என்று காவல்துறை முன்பு மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் பரவி வருகிறது. இது குறித்த வீடியோ பதிவு இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.