ரயில்களில் 3 ஆண்டுகளில்… பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எவ்ளோ தெரியுமா?!

Published:

RAILVA SELFE 4 - 2026

ரயில் நிலையங்கள் மற்றும் ஓடும் ரயில்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து, சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளனர். அதில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த எண்ணிக்கை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2017 முதல் 2019 வரை 3 ஆண்டுகளில் ரயில் நிலையம் மற்றும் வளாகங்களில் 136 பெண்களும், ஓடும் ரெயிலில் 29 பெண்களும் என மொத்தம் 165 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் பாலியல் பலாத்காரத்தைத் தவிர்த்து பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் மொத்தம் 1672 பதிவாகி உள்ளன. இதில் ரயில் நிலையங்களில் நடந்த குற்றங்கள் தொடர்பாக 802 வழக்குகளும், ஓடும் ரயிலில் நடந்த குற்றங்கள் தொடர்பாக 871 வழக்குகளும் பதிவாகி உள்ளன. மேலும், கடந்த 3 ஆண்டுகளில் 771 கடத்தல் வழக்குகளும், 4,718 வழிப்பறி வழக்குகளும், 213 கொலை முயற்சி வழக்குகளும் பதிவாகியுள்ளன.

ரயில் நிலையங்கள் மற்றும் ஓடும் ரயில்கள் என மொத்தம் 542 கொலைகள் நடந்துள்ளன. ரயில் நிலைய வளாகங்கள், ஓடும் ரயில்களில் நடக்கும் குற்றங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, குற்றங்கள் தொடர்பான வழக்கை நடத்துவது என அனைத்தும் மாநில அரசு மற்றும் மாநில அரசின் ரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறையினர் அதிகாரத்துக்குட்பட்டது!

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Related articles

Recent articles

spot_img