வேர்கடலை முள்ளங்கி கறி!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
peanut - 2026

வேர்க்கடலை – முள்ளங்கி கறி

mullanki - 2026

தேவையானவை:
பச்சை வேர்க்கடலை – அரை கப்,
முள்ளங்கி – கால் கிலோ (தோல் சீவி, நறுக்கவும்),
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
கடுகு, பெருங்காயத்தூள் – சிறிதளவு,
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்),
சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

mullanki peanut stew 1 - 2026

வேர்க்கடலையை வேகவைத்து தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து… வெங்காயம், முள்ளங்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர்விட்டு நன்றாக வேகவிடவும்.

இதனுடன் வேகவைத்த வேர்க்கடலை, சாம்பார் பொடி சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு இறக்கி கொத்த மல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.