கருத்தடைக்கு விருப்பமுள்ள, தகுதியுள்ள ஆண்கள் வரவேற்கப் படுகிறார்கள்: விஜய பாஸ்கர்!

அடடே... அப்படியா? பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
vijayabaskar - 2026

கருத்தடை சிகிச்சை செய்துகொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்’ என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க., உறுப்பினர் பரமசிவம், ‘பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த பிரச்னையைக் களைய, ஆண்கள் கருத்தடை சிகிச்சை செய்ய ஊக்குவிப்பதில், அரசிடம் ஏதேனும் திட்டமுள்ளதா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மக்கள் தொகைக் கட்டுப்பாடு முக்கியம். கருத்தடை செய்ய தனியாக துறை அமைக்கப்பட்டு, ஆண்டுக்கு இரண்டு லட்சம் பெண்களுக்குக் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆண்களுக்கு, கத்தியின்றி ரத்தமின்றி, எவ்வித தழும்புமின்றி, இரண்டு மணி நேரத்தில் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டு 80 பேருக்கும், 2019-ல் 800 பேருக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள, தகுதியுள்ள ஆண்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ய தயாராக உள்ளோம். கருத்தடை செய்துகொள்ள ஆண்கள் முன் வர வேண்டும்.இவ்வாறு அவர் பதிலளித்தார். அமைச்சரின் இந்த பதிலால், அவையில் சிரிப்பலை எழும்பியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.