காசி மகாகாள் எக்ஸ்பிரஸில் ஒரு பர்த்தை பரமசிவனுக்கு ரிசர்வ் செய்த விஷயம் பற்றி ஐஆர்சிடிசி விளக்கம் அளித்தது.
இது ஒரு தடவை பூஜைக்காக மட்டுமே செய்யப்பட்டதாக தெரிவித்தது. இந்தியாவின் மூன்றாவது தனியார் ரயிலான காசி மகாகாள் எக்ஸ்பிரஸை பிரதமர் மோடி ஞாயிறன்று திறந்து வைத்தார் . வாராணசி, இந்தோர் நகரங்களுக்கிடையே பயணிக்கும் இந்த ரயிலின் மூலம் மூன்று ஜோதிர்லிங்கங்கள்… ஓம்காரேஸ்வர், மஹாகாளேஷ்வர், காசி விஸ்வநாதர்… தரிசிக்க முடியும்.
இந்த ரயிலில் பி5 கோச்சில் 64வது நம்பர் சீட்டை ஒரு சிறிய கோவிலாக அமைத்துள்ளார்கள். 64வது நம்பர் இருக்கையை பரமசிவனுக்கு ரிசர்வ் செய்துள்ளார்கள். இறைவனின் படத்தை பூ மாலைகளால் அலங்கரித்து அழகாக காணப்படுகிறது.
இது விஷயமாக வட ரயில்வே அதிகார பிரதிநிதி தீபக் குமார் விளக்கமளித்தார். மகாகாளேஸ்வரருக்கு ஒரு பர்த் ரிசர்வு செய்தார்கள் என்ற செய்தியை அறிந்தவுடனே எம்ஐஎம் தலைவர் அசதுதீன் ஒவைசி எதிர்வினையாற்றினார்.
ட்விட்டரில் பிரதம மந்திரியின் அலுவலகத்தை டுவீட் செய்து இந்திய அரசாங்க சட்ட அமைப்பின் தலைப்பு போட்டோவை அதில் போஸ்ட் செய்தார். சிவனுக்கு நிரந்தரமாக பர்த் ஒதுக்கும் ஆலோசனையில் இருப்பதாக வந்த செய்தியை மறுத்து இந்தியன் ரயில்வேஸ் துணைப்பிரிவான ஐஆர்சிடிசி பதிலளித்தது.
காசி மகாகாள் எக்ஸ்பிரஸ் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜைக்காக 64 வது நம்பர் இருக்கையை பரமசிவனின் படங்களை வைத்து ஊழியர்கள் தாற்காலிகமாக வழிபட்டார்கள் என்று ஐஆர்சிடிசி தெளிவாக்கியது.
ஞாயிறன்று ரயில் தொடக்க விழாவுக்கு பயணிகளை அனுமதிக்கவில்லை என்றும் இந்த மாதம் 20ஆம் தேதி முதலே பயணிகளுக்கான சேவை அளிக்கப்படும் என்றும் அப்போது சிவனுக்கு பர்த் இருக்காது என்றும் தெரிவித்தது. இந்த ரயிலில் ஆன்மீக இசையோடு கூட ஒவ்வொரு கோச்சுக்கும் இரு கார்டுகள் இருப்பார்கள். சைவ உணவு மட்டுமே அளிக்கப்படும். இந்த ஏசி ரயில் வாரணாசி, இந்தூர் இடையில் வாரத்திற்கு மூன்று நாட்கள் செல்லும்.