ஹெட்போன் அணிந்து பாடல் கேட்டபடி நடப்பவரா நீங்கள்?

உள்ளூர் செய்திகள் சென்னை
shatbadi - 2026

திருவள்ளூர் ஆயில் மில் பகுதியை சேர்ந்தவர் மிதுன். இவர் திருநின்றவூரில் உள்ள ஜெயா கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இதனால் ரயிலில் செல்வதை மிதுன் வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இன்றுகாலை கல்லூரிக்கு செல்வதற்காகத் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு மிதுன் வந்துள்ளார். தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மிதுன் மீது சென்னையிலிருந்து கோவை சென்ற சதாப்தி விரைவு ரயில் மோதியது.

இதில் அவர் ரயிலில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்து உடனடியாக விரைவு ரயில் நிறுத்தப்பட்டது.

mithun - 2026

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவள்ளூர் ரயில்வே காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மாணவன் மிதுன் காதில் செல்போன் ஹெட்போன் வைத்து கொண்டு பாட்டு கேட்டபடி சென்றது தெரியவந்தது. இந்த விபத்தால் சதாப்தி விரைவு ரயில் 20 நிமிடங்கள் தாமதமாகச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.